தர்மபுரி மாவட்டம் முழுவதும்விநாயகர் சிலைகளை பாதுகாப்பாக கரைக்க நடவடிக்கைபோலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்


தர்மபுரி  மாவட்டம் முழுவதும்விநாயகர் சிலைகளை பாதுகாப்பாக கரைக்க நடவடிக்கைபோலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 14 Sep 2023 7:00 PM GMT (Updated: 14 Sep 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி சிலைகளை பாதுகாப்பாக கரைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் அறிவுறுத்தினார்.

ஆய்வுக்கூட்டம்

தர்மபுரி மாவட்ட போலீசாரின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் தர்மபுரியில் உள்ள மாவட்ட காவல்துறை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அந்தந்த போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குப்பதிவுகளின் விவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் பேசியதாவது:-

மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பதிவு செய்யப்படும் வழக்குப்பதிவு விவரங்களை மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்.

விநாயகர் சிலைகள்

போலீஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் புகார் கொடுக்க வரும்போது அவர்களிடம் கணிவாக பேச வேண்டும். அவர்களின் புகார்கள் மீது உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாட உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். விநாயகர் சிலைகளை பாதுகாப்பாக கரைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், புகழேந்தி, கணேஷ், மகாலட்சுமி, சிந்து, ராமச்சந்திரன், நாகலிங்கம் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story