மோகனூர் காவிரி ஆற்றில் கரைப்பதற்காக நாமக்கல் வழியாக வாகனங்களில் சென்ற விநாயகர் சிலைகள்
மோகனூர் காவிரி ஆற்றில் கரைப்பதற்காக நாமக்கல் வழியாக வாகனங்களில் சென்ற விநாயகர் சிலைகள்
மோகனூர் காவிரி ஆற்றில் கரைப்பதற்காக நாமக்கல் வழியாக வாகனங்களில் விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டன.
398 விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டன. கடந்த 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அந்தந்த பகுதி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இதனிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் மற்றும் திருச்செங்கோட்டில் உள்ள விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 164 விநாயகர் சிலைகளும், திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 234 விநாயகர் சிலைகளும் என மொத்தம் 398 விநாயகர் சிலைகள் மோகனூர் ஆற்றில் கரைப்பதற்காக சரக்கு ஆட்டோக்கள், மினி லாரிகள் மற்றும் லாரிகளில் நாமக்கல் வழியாக கொண்டு செல்லப்பட்டன.
போலீஸ் பாதுகாப்பு
அதையொட்டி நாமக்கல்லில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 8 வாகனங்களுக்கு ஒரு போலீசார் வீதம் பாதுகாப்புக்காக ஊர்வலமாக சென்று லாரிகளுடன் சென்றனர். அப்போது சிலைகளை எடுத்து செல்லும் வாகனங்களுடன், மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்ற வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர்.