ஒரு முகத்துடன் கூடிய சிலை திறப்பு
ஒரு முகத்துடன் கூடிய சிலை திறக்கப்பட்டது.
திருச்சி
திருச்சி பிராட்டியூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்புறம் படகு இல்லம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அப்பகுதியில் உள்ள குளத்தை தூர் வாரி சுற்றிலும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சீரமைக்கப்பட்ட குளத்தை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தென்னூர் அண்ணாநகர் சாலை சந்திப்பில் ஒரு முகத்துடன் கூடிய யானை, காளை சிலைகளை அமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் ராஜேந்திரன், மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story