மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து சிதம்பரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து சிதம்பரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூர்
சிதம்பரம்,
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் ஹிதயாயத்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் அகமதுல்லா, மாவட்ட செயலாளர்கள் நாசர்அலி, ஜாகீர்உசேன், அப்துல் கபூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் முகமதுஅலி வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ஹமீது ப்ரோஸ் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினார். தொகுதி தலைவர் பஷீர் அகமது நன்றி கூறினார்.
Related Tags :
Next Story