எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆண்டு விழா


எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆண்டு விழா
x

தென்காசியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 14-ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி தென்காசியில் கொண்டாப்பட்டது. தென்காசி நகரில் பல்வேறு பகுதிகளில் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பசுமையான மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் நடைபெற்றது. விழாவிற்கு நகர தலைவர் சீனா சேனா சர்தார் தலைமை தாங்கினார். கட்சியின் அமைப்பு செயலாளர் திவான் ஒலி, கேம்பஸ் பிரண்ட் மாநில பொது செயலாளர் முகம்மது சாஹிப், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தென்காசி நகர தலைவர் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் சேக் ஜிந்தா மதார், துணைச்செயலாளர் பீர் முகம்மது, பொருளாளர் சுல்தான் மற்றும் நகர செயற்குழு உறுப்பினர்கள் சலீம், மசூது அலி பாதுஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story