பஸ்சில் பெண்ணிடம் பணம் திருட்டு
நெல்லைக்கு பஸ்சில் வந்த பெண்ணிடம் பணம் திருட்டு போனது.
திருநெல்வேலி
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு நேற்று காலையில் அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் ஆலங்குளம் கடங்கநேரியை சேர்ந்த செல்வி என்பவர் வந்தார். அவர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக அங்கு இறங்கினார். அப்போது அவர் கொண்டு வந்த பையில் இருந்த மணிபர்சை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. அந்த மணிபர்சில் ரூ.2 ஆயிரத்து 500, ஆதார் கார்டு, ஏ.டி.எம். கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவை இருந்தன. இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிாிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story