ஆடுகள் திருட்டு; போலீசார் விசாரணை


ஆடுகள் திருட்டு; போலீசார் விசாரணை
x

ஆடுகள் திருட்டு; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

ஆவூர்:

விராலிமலை ஒன்றியம், மாத்தூர் தென்னம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் மூக்கன் (வயது 60). விவசாயியான இவர் 7 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மூக்கன் நேற்று முன்தினம் தனது வெள்ளாடுகளை ராசிபுரம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். பின்னர் அவர் அப்பகுதியில் சென்று பார்த்தபோது மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த 7 ஆடுகளும் மாயமாகி இருந்தது. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் ஆடுகள் கிடைக்காததால் மூக்கன் இதுகுறித்து மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்ட்டர் செவ்வந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story