குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்த புரோட்டா மாஸ்டரிடம் பணம் திருட்டு


குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்த புரோட்டா மாஸ்டரிடம் பணம் திருட்டு
x
தினத்தந்தி 23 July 2023 2:00 AM IST (Updated: 23 July 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்த புரோட்டா மாஸ்டரிடம் பணம் திருடப்பட்டது.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் ஒருவர் குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது அருகில் வந்த மர்ம ஆசாமி ஒருவர் நைசாக பையில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இரவு நேரத்தில் நடந்த இந்த திருட்டு அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. தற்போது இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பஸ் நிலையத்தில் குடிபோதையில் தூங்கியவர் காளிதாஸ் என்பதும், காரமடை பகுதியில் புரோட்டா கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. அவரிடம் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story