ஜாரி கொண்டலாம்பட்டியில்ஜவுளி கடையில் சேலைகள் திருட்டுவாலிபர் உள்பட 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


ஜாரி கொண்டலாம்பட்டியில்ஜவுளி கடையில் சேலைகள் திருட்டுவாலிபர் உள்பட 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
சேலம்

கொண்டலாம்பட்டி

ஜாரி கொண்டலாம்பட்டியில் ஜவுளி கடையில் சேலைகள் திருடிய வாலிபர் உள்பட 4 பேரை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஜவுளிக்கடை

சேலம் மாவட்டம் பூவானூரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45). இவர் ஜாரி கொண்டலாம்பட்டியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 3-ந் தேதி கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது கடைக்கு வந்த ஒரு ஆண் மற்றும் 3 பெண்கள் சேலை வாங்குவது போல் நடித்து 16 சேலைகளை திருடி சென்றனர்.

பின்னர் மாலையில் சேலைகளை எண்ணி பார்த்தபோது 16 சேலைகள் குறைவாக இருப்பது தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த தங்கராஜ் ஜவுளி கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்த்தபோது 35 வயது மதிக்கத்தக்க 3 பெண்கள் மற்றும் அவர்களுடன் வந்த ஒரு வாலிபர் ஆகியோர் 16 சேவைகளையும் திருடி சென்றயது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து தங்கராஜ் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலைகள் திருடிய வாலிபர் உள்பட 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story