ராஜபாளையம் சஞ்சீவி மலையில் படி பூஜை


ராஜபாளையம் சஞ்சீவி மலையில் படி பூஜை
x

ராஜபாளையம் சஞ்சீவி மலையில் படி பூஜை நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் கிழக்கு பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க சஞ்சீவி மலை உள்ளது. இந்த சஞ்சீவி மலையில் 365 படிகள் அமைக்கப்பட்டு மலை உச்சியில் குமாரசாமி கோவில் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ராஜபாளையம் சக்கராஜா கோட்டை சார்பில் படி பூஜை நடத்தப்பட்டது. மலை முந்தல் விநாயகர் கோவிலில் இருந்து முத்துராமலிங்கம் பஜனை குழுவினர் கீதங்கள் முழங்க ஊர்வலமாக வந்து 365 படிகளுக்கும் சிறப்பு வழிபாடு நடத்தி கற்பூரம் ஏற்றி மலை உச்சியில் உள்ள குமாரசாமி கோவிலை சென்று அடைந்தனர். உலக நன்மை வேண்டியும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


1 More update

Next Story