'உயர்வுக்கு படி' சிறப்பு முகாம்


உயர்வுக்கு படி சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 5 July 2023 12:15 AM IST (Updated: 5 July 2023 1:35 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி முகாமை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி முகாமை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தொடங்கி வைத்தார்.

சிறப்பு முகாம்

காரைக்குடி அழகப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கான சிறப்பு முகாமான "உயர்வுக்கு படி" முகாமினை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் மாணவ, மாணவிகள் எளிதில் அறிந்து கொண்டு, பயன்பெறும் வகையில் "நான் முதல்வன்" என்ற திட்டத்தினை முதல்-அமைச்சர் அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மாணவர்கள் படிக்கும் போது, எதிர்காலத்தில் என்ன படிக்கலாம் என்பது பற்றிய போதுமான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டும், கிராமப்புறங்களை சார்ந்த மாணவர்களுக்கு பயனுள்ள வகையிலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

எண்ணற்ற திட்டங்கள்

இதுகுறித்து அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைக்கல்வி மற்றும் உயர்நிலைக்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்துகின்ற வகையில், பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புக்களும் நடத்தப்பட்டுள்ளது. தற்போது சில மாணவர்கள் உயர்கல்வியில் சேராமல் இருக்கின்றனர். அவர்களுக்கு சிறந்த வழிகாட்டு முறைகளை வழங்கி உயர் கல்விக்கான திட்டமிடலுக்கு அடிப்படையாக இந்த முகாம் நடைபெற்று வருகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி மாணவர்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்) கர்ணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகணேஷ், ராஜலெட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், காரைக்குடி தாசில்தார் தங்கமணி மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story