சுப்பராயபுரம் ஊருக்குள் அரசு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சரிடம் மனு


சுப்பராயபுரம் ஊருக்குள் அரசு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சரிடம் மனு
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் யூனியன் சுப்பராயபுரம் ஊருக்குள் அரசு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் யூனியன் சுப்பராயபுரம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புதுரை, சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலர் ஆ.பாலமுருகன் ஆகியோர் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், "சுப்பராயபுரம் பஞ்சாயத்தில் சுப்பராயபுரம், சவுந்திரபுரம், இன்பபுரி ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நிதி தர வேண்டும். மேலும் நெல்லையில் இருந்து சாத்தான்குளம் வழியாக செல்லும் அரசு பஸ்கள் (தடம் எண் 165சி, 137, 137ஐ) சுப்பராயபுரம் கிராமத்தை புறக்கணித்து முத்துகிருஷ்ணாபுரம் வழியாக சென்று விடுகிறது. இதனால் சுப்பராயபுரம் கிராம மக்கள் சாத்தான்குளம், உடன்குடி உள்ளிட்ட பிற ஊர்களுக்கு செல்ல 3 கி.மீ தூரம் வந்து தான் செல்ல வேண்டியது உள்ளது. அவசர தேவைக்கு அதிகம் செலவு செய்து வாகனம் பிடித்து செல்ல வேண்டியுள்ளது. ஆதலால் சுப்பராயபுரத்தை புறக்கணித்து செல்லும் அரசு பஸ்களை முறையாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

மனுவை பெற்ற அமைச்சர், கனிமொழி எம்.பி.யிடம் பேசி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு ஏற்பாடு செய்வதாகவும், பஸ்களை முறையாக இயக்கிட நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.


Related Tags :
Next Story