கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
கோவை
கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
கலெக்டரிடம் மனு
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன். கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அதில், ஒரு கிலோ கொப்பரை தேங்காயின் விலை 140 ரூபாயில் இருந்து 70 ரூபாய் அளவுக்கு குறைந்து இருக்கிறது. அதை வாங்க ஆள் இல்லை. எனவே உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
போராட்டம் நடத்துவோம்
தேங்காய் விலை வீழ்ச்சி குறித்து அரசிடம் சொன்னாலும் நடவடிக்கை இல்லை. மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்து இருக்கிறோம் விரைவில் தீர்வு காணவில்லை என்றால் போராட்டம் நடந்துவோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலையே இப்பவும் கிடைக்கிறது.
கொப்பரைக்கு உரிய விலை கிடைக்க இந்த அரசு எதுவும் செய்ய வில்லை. மாநில அரசின் சார்பில் மத்திய அரசுக்கு எந்த கடிதமும் கொடுக்கப்பட வில்லை.
கொப்பரை தேங்காய் கிலோ விற்கு ரூ.150 எதிர்பார்க்கிறோம். வருடத்திற்கு 8 முறையாவது கொள்முதல் செய்ய வேண்டும். நியாய விலைகடையில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் கொடுக்கப்பட வேண்டும். விவசாயிகளின் வேதனையை தீர்க்க வேண்டும்.
வளர்ச்சி பணிகள்
பொள்ளாச்சியில் வளர்ச்சி பணிகள் அனைத்தையும் எந்த கார ணமும் இல்லாமல் நிறுத்தி விட்டார்கள். மேற்கு புறவழிச் சாலை, மாவட்ட மருத்துவமனைக்கான கூடுதல் கட்டிடங்கள் என நடை பெற்று வந்த பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது.
மாவட்ட மருத்துவமனை அமைக்கும் பணிகளை முடித்து தேவையான மருத்துவர்களை நியமிக்க வேண்டும். கோரிக்கை களுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட வில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராடுவதை தவிர வேறு வழி இல்லை.
எதிர்க்கட்சி உறுப்பினரின் சட்டமன்றத்தொகுதி என ஒதுக்க கூடாது.
விலை உயர்வு
பால்விலை, சொத்து வரி, மின்கட்டணம், தண்ணீர் வரி என அனைத்தும் உயர்ந்து இருக்கிறது. இதற்கெல்லாம் குரல் கொடுக்காத எதிர்க்கட்சிகள் செந்தில் பாலாஜிக்கு மட்டும் குரல் கொடுப்பது, அவர்கள் எதிர்க்கட்சி அல்ல, ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக இருக்கிறார்கள்.
மழைநீர் வடிகாலுக்கு தேவையான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.