தமிழகத்தில் அரசு பள்ளி கட்டிடங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சசிகலா


தமிழகத்தில் அரசு பள்ளி கட்டிடங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சசிகலா
x

தமிழகத்தில் அரசு பள்ளி கட்டிடங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சசிகலா கூறியுள்ளார்.

சென்னை,

சசிகலா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள அரசு பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் நரேஷ் என்ற மாணவன் கால் முறிந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பதாக வரும் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. மாணவன் நரேஷ் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

அதேபோன்று சென்னை திருவல்லிக்கேணி இருசப்ப கிராம தெருவில் என்.கே.டி.அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், அருகில் இருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் வரும் செய்திகள் கவலை அளிக்கிறது.

தி.மு.க. தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு, பராமரிக்க வேண்டிய கட்டிடங்களை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story