சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: மதுரை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு உறுதி


சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: மதுரை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு உறுதி
x

சீமைக்கருவைகள் மரங்களை முழுதாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக சார்பில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணையின் கீழ் ஏற்கனவே தமிழக அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு நீதிபதிகள் கேட்டிருந்தனர்.

அந்த உத்தரவை அடுத்து இன்று வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

கீழ் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் சீமைக்கருவைகள் மரங்களை முழுதாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக சார்பில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விளக்கத்தை ஏற்று தற்போது இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story