அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கைக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் வரவேற்பு


அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கைக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் வரவேற்பு
x

அருணா ஜெகதீசன் பரிந்துரையை வரவேற்று ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வந்த அருணா ஜெகதீசன் ஆணையம், தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்விதான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குருவிகளைப் போல, மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் எனவும், காவல்துறையினர் ஒளிந்துகொண்டு தப்பித்து ஓடியவர்களையும் சுட்டுப்படுகொலை செய்துள்ளனர் எனவும் கூறி, காவல்துறையைச் சேர்ந்த 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்குப் பரிந்துரை அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையை ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் வரவேற்றுள்ளனர். போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட 17காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ள அருணா ஜெகதீசன் பரிந்துரையை வரவேற்று ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். விசாரணை ஆணையத்தின் அறிக்கை வெளியாகி உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story