மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கியதையல் தொழிலாளி போக்சோவில் கைது
மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய தையல் தொழிலாளி போக்சோவில் கைது
காங்கயம்
தாராபுரம் அருகே குண்டடம் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான தையல் தொழிலாளி. இவரது மனைவியின் தங்கை 17 வயது சிறுமி ஆவார்.
சிறுமி அவ்வப்போது தனது அக்காள் வீட்டுக்கு வந்து சென்று வந்துள்ளார். அப்போது தையல் தொழிலாளி தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக வீட்டில் கூறினார். இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து சிறுமியிடம் கேட்டபோது தனது அக்காள் கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு தையல் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.