பயணிகள் ஏறி கொண்டிருந்தபோது அரசு பஸ்சை எடுத்ததால் மறியல்


பயணிகள் ஏறி கொண்டிருந்தபோது அரசு பஸ்சை எடுத்ததால் மறியல்
x

பயணிகள் ஏறி கொண்டிருந்தபோது அரசு பஸ்சை எடுத்ததால் மறியல் நடைபெற்றது.

கரூர்

நொய்யல்

கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தவிட்டுப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று அந்த வழியாக செல்லும் பஸ்களில் ஏறி பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பரமத்தி வேலூரில் இருந்து புகழூர் காகித ஆலைக்கு சென்ற அரசு டவுன் பஸ்சை தவிட்டுப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் நிறுத்தினர். அப்போது பஸ் நின்றது. பெண்கள் சிலர் பஸ்சில் ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது பஸ்சை டிரைவர் திடீரென நகர்த்தினார். இதனால் பஸ்சில் ஏறிய பெண்கள் திடீரென கீழே விழுந்தனர். இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த பஸ்சை மறித்து, டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு வந்து டிரைவரை கண்டித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story