விஷம் குடித்து வந்த வாலிபரால் பரபரப்பு


விஷம் குடித்து வந்த வாலிபரால் பரபரப்பு
x

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு விஷம் குடித்து வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்

கோயம்புத்தூர்

கோவை

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு விஷம் குடித்து வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். கலெக்டர் அலுவலகம் முன் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் முககவசம் அணிந்து வந்து மனு அளிக்குமாறு போலீசார் கூறினர். போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களின் உடைமைகளை சோதனை செய்த பிறகே போலீசார் அனுமதித்த னர்.

விஷம் குடித்து வந்தார்

அப்போது வாயில் நுரையுடன் தள்ளாடியபடி வாலிபர் ஒருவர் நடந்து வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

இதில் அவர், கோவை இருகூர் ஏ.ஜி.புதூரை சேர்ந்த கோபால கிருஷ்ணன் (வயது 35) என்றும், பக்கத்து வீட்டை சேர்ந்த நபரு டன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விஷம் குடித்து விட்டு மனு அளிக்க வந்ததாக கூறினார்.

உடனே போலீசார் அந்த வாலிபரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாற்று இடம் வேண்டும்

கோவை பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபுள்யு. பிரிவு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில்,

எங்கள் வீடுகளுக்கு மின்சாரம், தண்ணீர், சொத்து வரி உள்ளது. தற்போது பெரிநாயக்கன்பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக நில எடுப்பிற்கு நெடுஞ்சாலை துறையினர் நிலம் கையகப்படுத்தப்படும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள், எங்களது குடியிருக்கும் வீடுக ளை காலி செய்யக்கோரி நோட்டீஸ் வழங்கி உள்ளனர். மாற்று இடம் வழங்கிய பிறகே எங்களது வீடுகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

எரிவாயு நிரப்பும் பணி

தமிழ்நாடு பெட்ரோலியம் அண்டு கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் அமைப்பினர் அளித்த மனுவில், பீளமேட்டில் உள்ள பெட்ரோலியம் நிறுவனத்தில் தனியார் ஒப்பந்ததாரருக்கு கீழ் 110 ஊழியர்கள் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு எரிவாயு நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

தற்போது எவ்வித பயிற்சி இல்லாத நபர்க ளை பணியில் ஈடுபடுத்துகின்றனர். அதை தடுக்க வேண்டும். மேலும் எங்களுக்கு உரிய சம்பளம் வழங்குவதுடன், காலி பணி யிடங்களில் உள்ளூர் ஆட்களை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

நிலம் அபகரிப்பு

சூலூர் கலங்கலை சேர்ந்த குப்பம்மாள் தனது உறவினர்களுடன் கைகளில் கீரை கட்டுகளுடன் வந்து அளித்த மனுவில், எனது தந்தைக்கு, நிலச்சீர்திருந்த துறை 1968-ம் ஆண்டு வழங்கிய நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார்.

அவரது இறப்பிற்கு பின்னர் சிலர் அந்த நிலத்தை அபகரித்து கொண்டு எங்களை மிரட்டுகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.


Next Story