ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி, ஆற்றில் கவிழ்ந்தது
குடவாசல் அருகே ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாாி, ஆற்றில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிா்தப்பினார்.
குடவாசல்;
குடவாசல் அருகே ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாாி, ஆற்றில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிா்தப்பினார்.
ஆற்றில் கவிழ்ந்த லாரி
அாியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு மகன் சந்தோஷ்(வயது27). லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு காரைக்காலில் இருந்து லாரியில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு குடவாசல் அருகே வந்தாா். வெள்ளமண்டபம் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முடிகொண்டான் ஆற்றில் தலைகீழாக கவிழ்ந்தது.இதில் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர்த்தப்பினார்.
போலீசாா் விசாரணை
இது குறித்து லாரி டிரைவர் சந்தோஷ் தனது லாரி உரிமையாளருக்கு தகவல் அளித்தாா். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு 2 கிரேன்கள் வரவழைக்கப்பட்டு லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த குடவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.