ரெயில்வே தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டதால் பரபரப்பு


ரெயில்வே தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டதால் பரபரப்பு
x

ரெயில்வே தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டதால் பரபரப்பு

ஈரோடு

சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 21-ந் தேதி காலை 8.10 மணிஅளவில் ஊஞ்சலூரை கடந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டு இருந்ததை பார்த்ததும் ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். தண்டவாளத்தில் கிடந்த கற்களை அகற்றிய பிறகு அவர் ரெயிலை மீண்டும் இயக்கினார். இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் கொடுத்த தகவலின்பேரில் ஈரோடு ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் அங்கு சென்று விசாரணை நடத்தினர். சிறுவர்கள் சிலர் அந்த வழியாக சென்றபோது தண்டவாளத்தில் கற்களை வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த வழியாக செல்லும் தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டன. மீண்டும் தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் கூறுகையில், "ரெயில்வே தண்டவாளத்தில் விளையாட்டு தனமாக கற்களை வைப்பது குற்ற செயலாகும். எனவே இனிமேல் தண்டவாளத்தில் கற்களை வைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தண்டவாளத்தில் கற்கள் வைக்கக்கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அங்கு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது", என்றனர்.


Next Story