சிறுவனின் காதில் இருந்த கல் அகற்றம்


சிறுவனின் காதில் இருந்த கல் அகற்றம்
x

சிறுவனின் காதில் இருந்த கல் அகற்றப்பட்டது.

புதுக்கோட்டை

அன்னவாசல் புதுத்தெருவை சேர்ந்த 4 வயது சிறுவன் நேற்று தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது காதுவலியால் அலறி துடித்தான். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் டாக்டர் மணியன் சிறுவனை பரிசோதித்தபோது அவனது காதில் சிறிய அளவிலான கல் இருப்பதை கண்டறிந்தார். அதன்பின்னர் சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுவனின் காதில் இருந்த கல்லை வெளியில் எடுத்தார். பின்னர் சிறுவன் சகஜ நிலைக்கு திரும்பினான். இதையடுத்து அரசு டாக்டருக்கு சிறுவனின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

1 More update

Next Story