பால்குட ஊர்வலத்தில் கல் வீச்சு


பால்குட ஊர்வலத்தில் கல் வீச்சு
x

தேவதானப்பட்டி அருகே கோவில் திருவிழாவையொட்டி நடந்த பால்குட ஊர்வலத்தில் கல்வீசிய தாக்குதல் நடந்தது. இதில் பெண் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.

தேனி

தேவதானப்பட்டி அருகே குள்ளபுரம் கிழக்கு காலனியில் மண்டு கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம், அதே பகுதியில் உள்ள ஒரு தெரு வழியாக சென்றது. அப்போது அங்கு ஊர்வலம் செல்ல கூடாது என ஒரு தரப்பினர் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனையும் மீறி ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை மீது கற்களை வீசினர். மேலும் கட்டைகளால் தாக்கி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவலறிந்த ஜெயமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கல்வீச்சு மற்றும் தாக்குதலில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டக்காமன்பட்டியை சேர்ந்த பிரியா (வயது 29) படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக குள்ளபுரத்தை சேர்ந்த ஆசை பாண்டி (30), தங்கப்பாண்டி (28), அறிவு (35), அர்ஜுனன் உள்பட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story