கிராமங்களுக்கு இரவு நேரம் இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் நிறுத்தம்


கிராமங்களுக்கு இரவு நேரம் இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் நிறுத்தம்
x
தினத்தந்தி 15 Sept 2023 3:30 AM IST (Updated: 15 Sept 2023 3:30 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கிராமங்களுக்கு இரவு நேரம் இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

தேனி

உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம் பகுதியை சுற்றி எரசை, அப்பிபட்டி, ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் போதிய வேவைவாய்ப்பு இல்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்டங்கள், கம்பம் பகுதியில் உள்ள ரெடிமேடு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு வேலைக்கு வந்து செல்கின்றனர். இதற்காக கம்பம் பகுதியில் இருந்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 1 மாதமாக கம்பம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து குள்ளப்பகவுண்டன்பட்டிக்கு அதிகாலை சுமார் 4 மணி, இரவு 9 மற்றும் 10 மணிக்கு இயக்கப்பட்ட டவுன் பஸ் நிறுத்தப்பட்டது.

இதேபோல் அதிகாலை சுமார் 4 மணி, இரவு 9.30 மணிக்கு கம்பத்தில் இருந்து ராயப்பன்பட்டி வழியாக உத்தமபாளையத்திற்கும், இரவு 9 மணிக்கு எரசை வழியாக சின்னமனூருக்கும் இயக்கப்பட்டு வந்த அரசு டவுன் பஸ் எந்த அறிவிப்புமின்றி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் இரவு நேரத்தில் கிராமத்திற்கு செல்லக்கூடிய பெண் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்களை மீண்டும் இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story