போளூர் அருகே 2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

போளூர் அருகே 2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
x

போளூர் அருகே 2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

திருவண்ணாமலை

போளூர் அருகே 2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

போளூர் அடுத்த 99 புதுப்பாளையம் கிராமத்தில் 15 வயது சிறுமிக்கும், போளூர் அடுத்த களம்பூரை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இதுபற்றி திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் உதவி அலகு அலுவலர் அசோக், மற்றும் சமூக நலத்துறை சார்பில் அஞ்சலிதேவி, போளூர் மகளிர் போலீஸ் நிலைய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவர்கள் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

Next Story