சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்


சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
x

பாளையங்கோட்டையில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

திருநெல்வேலி

பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் பகுதியில் 15 வயது சிறுமிக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வீரமாணிக்கபுரத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில், அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், அவரது உறவினர் ஒருவரின் 15 வயது மகளுக்கும் திருமணம் நடக்க இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்கள்.

இதனைத்தொடர்ந்து போலீசார் சிறுமியை பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன் பின்னர் அந்த சிறுமி காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். தலைமறைவான அந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story