'மாண்டஸ்' புயல் எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


மாண்டஸ் புயல் எதிரொலி:  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
x

‘மாண்டஸ்’ புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதால் இன்று மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல்

சாரல் மழை

வங்கக்கடலில் எழுந்துள்ள 'மாண்டஸ்' புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் நேற்று நாமக்கல், பரமத்திவேலூர், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு சாரல்மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் ஆங்காங்கே குடை பிடித்து செல்வதை பார்க்க முடிந்தது. குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையும் காணப்பட்டது.

இரவில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்ட நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் சென்னை, கடலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

எனவே மாணவ, மாணவிகளின் நலன்கருதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவித்து உள்ளார். கலெக்டரின் அறிவிப்பால் மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர். இதேபோல் புயல் மழையினால் ஏற்படும் சேதத்தை தடுக்க தீயணைப்பு துறையினரும், போலீசாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story