வங்கக்கடலில் புயல் சின்னம் எதிரொலி கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


வங்கக்கடலில் புயல் சின்னம் எதிரொலி    கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x

வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

கடலூர்

கடலூர் முதுநகர்,

அந்தமான் அருகே உள்ள வங்கக்கடலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று முன்தினம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதையடுத்து கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தற்போது இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு சிட்ரங்கு என பெயரிடப்பட்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை (செவ்வாய்க்கிழமை) வங்காளதேச பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் நேற்று இரவு 2-ம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.


Next Story