மாணவ-மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டி


மாணவ-மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டி
x

கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா: மாணவ-மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டி

திருப்பூர்

தளி,

உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உடுமலை வட்டார அளவிலான 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பண்டைத் தமிழ் சமூகம் என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது. போட்டியை பள்ளித் தலைமை ஆசிரியை ப.விஜயா தொடக்கி வைத்தார். இதில் உடுமலை வட்டாரத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வருகின்ற 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக தமிழ் ஆசிரியர்கள் பி.சுமதி, சி.ராஜாத்தி, ஆர். ராஜேந்திரன் ஆகியோர் செயல்பட்டனர். கட்டுரை போட்டியை உடுமலை வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுனர்கள் எ.சண்முகசுந்தரம், கே.கந்தசாமி, மற்றும் எஸ்.ராம்பிரசாத் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். தமிழாசிரியர் வே.சின்னராசு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.




Next Story