ஸ்தோத்திர பண்டிகை கொடியேற்றம்


ஸ்தோத்திர பண்டிகை கொடியேற்றம்
x

ஸ்தோத்திர பண்டிகை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் சேகரத்தில் 75-வது ஸ்தோத்திர பண்டிகை கொடியேற்றம் நடந்தது. இதை முன்னிட்டு விக்கிரமசிங்கபுரம் மூன்று விளக்கு திடலிலிருந்து பவனியும், இதனை தொடர்ந்து சேகர வளாகத்தில் கொடியேற்றமும் நடந்தது. கொடியை சேகர தலைவர் கிறிஸ்டோபர் தவசிங் ஏற்றினார். தொடர்ந்து ஆயத்த ஆராதனை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

நிகழ்ச்சியில் சேகர செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் பால்ராஜ், சபை ஊழியர்கள் ஞானக்கண், ஜான்ஆல்வின், ஹென்றி ஜெயக்குமார், ஆபேல்சேத், சுதாகர், மார்ட்டின் விஜிதுரை, செல்வராஜ், சுரேஷ் டேனியல் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story