எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2023 12:15 AM IST (Updated: 14 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

கடையநல்லூர்:

பாலஸ்தீனத்தின் மீது அத்துமீறி கொடூர தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேல் பயங்கரவாதத்தை கண்டித்தும், சுதந்திர பாலஸ்தீனுக்காக உலக நாடுகள் தலையிட வலியுறுத்தியும் தென்காசி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் செய்யது மஹ்மூத், திவான் ஒலி, மாவட்ட துணைத்தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான யாசர் கான், மாவட்ட செயலாளர் நூர் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், வர்த்தகர் அணி மாநில பொதுச்செயலாளர் ஜாபர் அலி உஸ்மானி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராகவும், சுதந்திர பாலஸ்தீனுக்காக உலக நாடுகள் தலையிட வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். நகர செயலாளர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.

1 More update

Next Story