எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம்
x

அம்பையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர செயற்குழு கூட்டம், தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் சையது அலி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக புறநகர் மாவட்ட செயலாளர் கல்லிடைக்குறிச்சி சுலைமான், மாவட்ட வர்த்தக அணி தலைவர் அம்பை ஜலில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அம்பை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். அம்பை பஜார் பகுதிகளில் மாடுகளின் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் அப்துல் ஹமீது, இக்பால், ஈசான், அப்துல் ஹமீது, சேக் முகமது, அபூபக்கர், செய்யது அலி, நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். நகர துணை செயலாளர் செய்யது அலி நன்றி கூறினார்.


Next Story