எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம்
பத்தமடையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
சேரன்மாதேவி:
பத்தமடையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயற்குழு சிறப்பு கூட்டம் மாவட்ட தலைவர் பீர்மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா வரவேற்றார். துணை தலைவர் முல்லை மஜித், அமைப்பு பொதுச்செயலாளர் சிராஜ், வர்த்தகர் அணி தலைவர் அம்பை ஜலில், அம்பை தொகுதி தலைவர் செய்யது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மண்டல தலைவர் சுல்பிகர் அலி கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு மணிமுத்தாறு, பாபநாசம் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் கூடுதல் பராமரிப்பு செய்ய மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் புறநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் வள்ளியூர் சலீம், வள்ளியூர் நகர தலைவர் ஷேக், பத்தமடை நகர தலைவர் ஷெரிப், சேரன்மாதேவி நகர தலைவர் அகமது மைதீன், அம்பை நகர தலைவர் நாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் சுலைமான் நன்றி கூறினார்.