எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம்
களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி
களக்காடு:
களக்காடு நகர எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா, வர்த்தகர் அணி மாவட்ட துணை தலைவர் பீமாஸ் உசேன் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆரிப் பைஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், களக்காடு நகராட்சிக்கு காலதாமதமின்றி தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்க வேண்டும். புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையினரும், வருவாய்த்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். களக்காடு நகராட்சி மக்களுக்கு பொதுவான சிவபுரம் சாலையை அடைத்து வைத்திருக்கும் வனத்துறையை கண்டித்து தொடர் போராட்டம் நடத்துவது என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில், நகர செயலாளர் காஜா முகைதீன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story