எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

ஏர்வாடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தஞ்சை பாரூக் ஆகியோரது வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை மாவட்ட தலைவர் பீர்மஸ்தான் தலைமை தாங்கினார். ஏர்வாடி நகர செயலாளர் ஷேக் முகைதீன், தொகுதி பொறுப்பாளர் காலித், மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராஷா, நகர பொருளாளர் ரிஸ்வான், விமன் இந்தியா மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா, நகர காங்கிரஸ் தலைவர் ரிமா பைசல், தி.மு.க. வக்கீல் மோசே உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


Next Story