எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
சேலம்

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஷரிப் பாஷா தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் அப்சர் அலி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அம்ஜத்பாஷா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் காஜாமைதீன் கலந்து கொண்டு பேசினர். இதில் நெல்லையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story