பக்தர்களை மாடு தாண்டும் வினோத வழிபாடு


பக்தர்களை மாடு தாண்டும் வினோத வழிபாடு
x

ராசிபுரத்தில் பக்தர்களை மாடு தாண்டும் வினோத வழிபாடு நடைபெற்றது.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் டவுன் மேட்டு தெருவில் பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதமாய் பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார். ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி பக்தர்களை மாடு தாண்டும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் பெருமாள் சாமியை குல தெய்வமாக வழிபடும் சேலம் சின்ன திருப்பதி மற்றும் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டவர்கள் மாட்டை அழைத்துக் கொண்டு ராசிபுரம் எல்லை பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றனர். அங்கிருந்து மாட்டை மலர் மாலைகளால் அலங்கரித்து மேளதாளத்துடன் சக்தி அழைத்துக்கொண்டு ஊர்வலமாக பெருமாள் கோவிலை சென்றடைந்தனர். பெருமாள் சாமிக்கு சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் செய்யப்பட்டன. கோவிலின் முன்பு மாடு தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் தரையில் படுத்து இருந்தனர். மாடு பக்தர்களை தாண்டி சென்றது. மாடு பக்தர்களை தாண்டி செல்லும்போது அதன் கால்கள் பக்தர்கள் மேல் படாமல் சென்றால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம் பக்தர்களிடையே நிலவி வருகிறது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story