வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் வைக்கோல்


வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் வைக்கோல்
x

வத்திராயிருப்பு பகுதியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு வைக்கோல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு கட்டு ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு பகுதியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு வைக்கோல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு கட்டு ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அறுவடை பணி

வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் கான்சாபுரம், அத்தி கோவில், கூமாபட்டி, நெடுங்குளம், பிளவக்கல்அணை, தம்பிபட்டி, இலந்தைகுளம், மகாராஜபுரம், சுந்தரபாண்டியம், கோட்டையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கோடைகால அறுவடை பணியினை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

மாட்டு தீவனம்

மேலும் இப்பகுதியில் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல்கள் மாடுகளுக்கு தீவனமாக கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும், கம்பம், தேனி, குமுளி, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் ஒரு ஏக்கர் வைக்கோல் கட்டுகளை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,500 வரை வாங்கி செல்கின்றனர்.

வெளி மாநிலங்கள்

வியாபாரிகள் வாங்கிய வைகோல்களை எந்திரத்தின் மூலம் கட்டு போட்டு வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. எந்திரத்தின் மூலம் வைக்கோல் கட்டுவதற்கு கட்டு ஒன்றுக்கு ரூ.35 செலவாகிறது என விவசாயிகள் கூறுகின்றனர்.

ஒரு ஏக்கருக்கு 50 முதல் 60 வைக்கோல் கட்டு வரை கிடைப்பதாகவும் கூறுகின்றனர். இந்த வைக்கோல் கட்டுகளை ஒரு கட்டு ரூ.150-க்கு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகிறோம் என விவசாயிகள் கூறினர்.


Next Story