அறுவடை வயல்களிலேயே வீணாகி வரும் வைக்கோல்


அறுவடை வயல்களிலேயே வீணாகி வரும் வைக்கோல்
x

அறுவடை வயல்களிலேயே வீணாகி வரும் வைக்கோல்

தஞ்சாவூர்

மெலட்டூர் பகுதியில் அறுவடை வயல்களிலேயே வைக்கோல்கள் வீணாகி வருகிறது.

வீணாகும் வைக்கோல்கள்

பாபநாசம் தாலுகா சாலியமங்கலம், மெலட்டூர், திருக்கருகாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சம்பா பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் எந்திரங்கள் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். அறுவடை செய்த வயல்களில் உள்ள வைக்கோல்களை வாங்க வெளியூர் வியாபாரிகள் வரவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த தொடர்மழையால் அறுவடை செய்த வயல்களில் கிடந்த வைக்கோல்கள் மழையில் நனைந்து அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சம்பா. தாளடி பருவத்தில் அறுவடை செய்யும் போதே அரியலூர், பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வெளியூர் வியாபாரிகள் முன்கூட்டியே வந்து வைக்கோல்களை விலைபேசி எந்திரம் மூலம் வைக்கோலை கட்டி லாரி மூலம் எடுத்து சென்று விடுவார்கள்.

விவசாயிகளுக்கு நஷ்டம்

வைக்கோல் மூலம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 8ஆயிரம் வரைக்கும் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு சம்பா அறுவடை வைக்கோல்களை வாங்க வெளியூர் வியாபாரிகள் வராததால் அறுவடை வயல்களில் கிடந்த வைக்கோல்கள் மழையில் நனைந்து அழுகி வீணாகி விட்டது. மழையில் நனைந்த நிறம் மாறிய வைக்கோல்களை வெளியூர் வியாபாரிகள் வாங்க மாட்டார்கள். உள்ளூரிலும் விற்க முடியாது. இதனால் ஏக்கருக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே மழையால் சேதமடைந்த வைக்கோல் விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story