கிணத்துக்கடவு பகுதியில் தெருநாய்கள் தொல்லை; வாகன ஓட்டிகள் அவதி-உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


கிணத்துக்கடவு பகுதியில் தெருநாய்கள் தொல்லை; வாகன ஓட்டிகள் அவதி-உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு பகுதியில் தெருநாய்கள் தொல்லை; வாகன ஓட்டிகள் அவதி-உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதிகளில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தற்போது கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளது. தெருநாய் தொல்லை அதிகரிப்பால் வீதிகளில் 2 சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சரிவர வாகனங்களை ஓட்ட முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர், அதேபோல் நடந்துசெல்லும் பொதுமக்கள் மீதும் நாய்கள் கூட்டமாக வந்து மோதுகிறது. இதனால் பொதுமக்களும் கடும் அச்சம் அடைந்து வருகின்றனர். கோவை- பொள்ளாச்சி மெயின் ரோடு மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட பல வீதிகளில் இந்த தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக செல்வதால் அந்த பகுதிகளில் 2 சக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் தெருநாய்மீது மோதி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். அதேபோல் பல வீதிகளில் சுற்றித் திரியும் நாய்கள் அந்த வழியாக நடந்து செல்லும் பொது மக்களை துரத்திச் சென்று கடித்து வருகிறது. இதனால் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதிகளில் உள்ள உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் நபர்கள் தங்களது உறவினர் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் சுற்றி தெரியும் தெரு நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட துறை நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.


Next Story