நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பொள்ளாச்சியில் தெருமுனை பிரசாரம்


நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பொள்ளாச்சியில் தெருமுனை பிரசாரம்
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பொள்ளாச்சியில் தெருமுனை பிரசாரம்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நீட், கியூட் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பேசினார். நீட் மற்றும் கியூட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிக்க கூடாது. அரசு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை வலுப்படுத்த வேண்டும் என்று பிரசார கூட்டத்தில் வலியுறுத்தி பேசினார்கள். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தெருமுனை பிரசார கூட்டம் நடைபெறுவதாக கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story