காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்
காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
ஆம்பூர்
காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு மற்றும் பா.ஜ.க. அரசின் அடக்குமுறையை கண்டித்து வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் தெரு முனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு தெற்கு ஒன்றிய தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் வரவேற்றார். தெருமுனை பிரசார கூட்டத்தை வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி சிறப்புரை ஆற்றினர். குடியாத்தம் நகர காங்கிரஸ் தலைவர் விஜயன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம், மாவட்ட நிர்வாகிகள் சரவணன், மகாலட்சுமி, ராகீப் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஜானகிராமன் நன்றி கூறினார்.