தெருமுனை பிரசாரம்


தெருமுனை பிரசாரம்
x

தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

கரூர்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் குளித்தலையில் வருகிற 7-ந்தேதி போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டதை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தோகைமலையில் தெருமுனை பிரசாரம் நடந்தது. கட்சியின் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட குழு உறுப்பினர் பெருமாள் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் கிளை செயலாளர் ரமேஷ், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் கீழவெளியூரிலும் தெருமுனை பிரசாரம் நடந்தது.


Next Story