விழுப்புரம் மாவட்டத்தில் தெருவோர குழந்தைகளை கண்டறிந்து பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்க வேண்டும்:ஒருங்கிணைப்புக்குழு அதிகாரிகளுக்கு கலெக்டர் பழனி அறிவுரை


விழுப்புரம் மாவட்டத்தில் தெருவோர குழந்தைகளை கண்டறிந்து பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்க வேண்டும்:ஒருங்கிணைப்புக்குழு அதிகாரிகளுக்கு கலெக்டர் பழனி அறிவுரை
x

விழுப்புரம் மாவட்டத்தில் தெருவோர குழந்தைகளை கண்டறிந்து பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்று ஒருங்கிணைப்புக்குழு அதிகாரிகளுக்கு கலெக்டர் பழனி அறிவுறுத்தியுள்ளார்.

விழுப்புரம்

பாதுகாப்புக்குழு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் மற்றும் குழந்தைகள் சார்பு துறையினருக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் பதிவு பெறாமல் செயல்பட்டு வரும் விடுதிகள், குழந்தைகள் இல்லம் குறித்த தகவலை தெரிவிக்க குழந்தைகளுக்கான பாதுகாப்புக்குழு கூட்டம் 3 மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பள்ளி செல்லா குழந்தைகள், வேலை செய்யும் குழந்தைகள், பிச்சையெடுக்கும் குழந்தைகள் மற்றும் தெருவோர குழந்தைகள் உள்ளனரா என்பது குறித்து குழந்தைகளுக்கான சார்புத்துறையினர் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்தால் அக்குழந்தைகளை இல்லத்தில் சேர்த்து பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story