நரிக்குறவர் காலனிக்கு தெருவிளக்கு வசதி


நரிக்குறவர் காலனிக்கு தெருவிளக்கு வசதி
x
தினத்தந்தி 20 July 2023 1:00 AM IST (Updated: 20 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

நரிக்குறவர் காலனிக்கு தெருவிளக்கு வசதி

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாநகராட்சி 2-வது வார்டான துடியலூர் புது முத்துநகர் நரிக்குறவர் காலனியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களுக்கு தெருவிளக்கு வசதி மற்றும் குடிநீர் வசதி செய்துதரப்படவில்லை. இதையடுத்து தங்களது பகுதிக்கு தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளாக மாநகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளித்து வந்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் புதுமுத்துநகர் நரிக்குறவர் காலனிக்கு தெருவிளக்கு வசதி மற்றும் பொது குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தி கொடுக்கும்படி மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் மேயர் கல்பனா ஆனந்த குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது.

30 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வு கிடைத்ததை தொடர்ந்து நரிகுறவ மக்கள் நேற்று சமூக நீதி கட்சி தலைவர் பன்னீர் செல்வம், சமூகநீதி நரிக்குறவர் சங்கத்தின் தலைவர் சத்திய குமார் உள்ளிட்டோர் நேற்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்பை அவரது அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது நரிக்குறவ மக்கள் தங்களது பாரம்பரிய மாலையை ஆணையாளருக்கு அணிவித்து நன்றி கூறினர். இதேபோல் மேயர் கல்பனா ஆனந்தகுமாரை சந்தித்தும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.



Next Story