வரி பாக்கி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை


வரி பாக்கி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் நகராட்சியில் வரி பாக்கி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை ஆணையர் கீதா எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர் கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில் வசிக்கும் பலர் வீட்டு வரி, குடிநீர் வரி, கடை வாடகை, தொழில்வரி மற்றும் காலி மனை வரி என பல்வேறு வகையில் ரூ.6 கோடி பாக்கி உள்ளது. இதனால் நகராட்சியில் மக்களுக்கு தேவையான கழிவு நீர் வாய்க்கால், குடிநீர் பராமரிப்பு, தெரு விளக்கு, சாலை வசதிகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் நகராட்சிகளின் சட்டம் 1920-ன் படி ஒவ்வொரு ஆண்டும் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30-ந் தேதிக்குள்ளாகவும், 2-வது அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 31-ந் தேதிக்குள்ளாகவும் செலுத்த வேண்டும் என்ற நிலைமை இருக்க சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் மார்ச் 31-ந் தேதி தான் கடைசி தேதி என நினைத்து பலர் இன்னமும் வரி செலுத்தாமல் உள்ளனர். இனியாவது வரி பாக்கி வைத்திருப்போர்கள் உடனடியாக வரியை நகராட்சிக்கு செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் நகராட்சி நிர்வாகம் தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வரிபாக்கி வைத்திருப்பவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை பார்வைக்கு வைக்கவும், குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story