ஏரியில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
வந்தவாசியில் ஏரியில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வந்தவாசி
வந்தவாசியில் ஏரியில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கலெக்டர் ஆய்வு
வந்தவாசியில் பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிட திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வந்திருந்தார்.
முன்னதாக அவர் வந்தவாசி, கீழ்சாத்தமங்கலம் பகுதியில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர் வந்தவாசி நகரில் காஞ்சீபுரம் சாலையில் உள்ள "பி" ஏரிக்கரையை பார்வையிட்டார்.
அங்கு கோழி, மாட்டு கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது.
கடும் நடவடிக்கை
இதையடுத்து கோழி, மாட்டு கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குப்பைகள், கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.
அப்போது நகரமன்ற தலைவர் ஜலால், நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூர்த்தி, ரதிகாந்திவரதன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.