குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை


குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை
x

சமுதாயத்தை சீர்குலைக்கும் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

அதிரடி நடவடிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குற்ற செயல்களை தடுக்கும் வகையில் சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பனை செய்வோர், கஞ்சா விற்பனை செய்வோர் மீது கைது நடிவடிக்கை, போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது போன்ற பல்வேறு நடவடிக்ககைளை எடுத்து வருகிறார்.

குண்டர் தடுப்பு சட்டத்தில்

இது தவிர குற்ற செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் சாராயம் மற்றும் கஞ்சா வியாபாரிகள் கதிகலங்கி போய் உள்ளனர். போலீஸ் கெடுபிடிக்கு பயந்து சில வியாபாரிகள் தலைமறைவாகி விட்டனர். இவர்களுக்கு உடந்தையாக இருக்கும் சில போலீஸ்காரர்களும் எங்கே மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இவர்கள் போலீஸ் சூப்பிரண்டுவின் கழுகுபார்வையில் உள்ளனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை போன்ற சட்டத்துக்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story