பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை


பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை
x

பொள்ளாச்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் தடையை மீறும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் தடையை மீறும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கடைகளில் ஆய்வு

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பொள்ளாச்சி நகர பகுதிகளில் உள்ள சில உணவகங்களில் பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்களை பார்சல் செய்து கொடுக்கின்றனர். மேலும் கடைகளிலும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோரின் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று வியாபாரிகளுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் ஆய்வு செய்ததில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

சீல் வைக்கப்படும்

பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து உள்ளது. இதை தடுக்க கடைகளுக்கு நேரடியாக சென்று பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 105 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பிளாஸ்டிக் கவர்களில் வழங்கப்படும் உணவு பொருட்களை சாப்பிடுவது உடலுக்கு கேடுவிளைப்பதாகும். மேலும் பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும்போது மஞ்சப்பை எடுத்து செல்ல வேண்டும். உணவகங்களுக்கு பாத்திரங்களை கொண்டு சென்று உணவு பொருட்களை வாங்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, கடைக்கு சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story