வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை-மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை
வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை என மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலி
நெல்லை அருகே உள்ள மானூர் பகுதியில் ஜெயக்குமார், பாலகணேஷ், சங்கர், ராமநாதன், அழகு மாணிக்கம், ராமன் ஆகிய 6 பேரும் மானூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது தோட்டத்தில் வைத்து 3 புள்ளிமான்களை வேட்டையாடி இறைச்சியாக்கி வைத்திருந்த போது 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ராமன், பாலகணேஷ் ஆகிய 2 பேர் தப்பியோடி விட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
இவர்கள் பற்றி தகவல் அறிந்தால் நெல்லை மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறை 0462 2553005, 2903605 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதுபோன்ற வன உயிரினங்களை வேட்டையாடுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டால் தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தகவலை மாவட்ட வன அலுவலர் இரா.முருகன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story